தமிழ்நாட்டில் 3 இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!
மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 3 இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா, ஒடிஷா பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.






