ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்..!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் வீடுகள் கடைகள் அடித்து செல்லப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரங்களில் இருந்த வீடுகள், கடைகள் அடித்து செல்லப்பட்டன.
மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






