--- --:--:-- --

ஒரே நேரத்தில் இரண்டு வகை மரபணு மாற்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!

2

பெல்ஜியத்தில் 90 வயது பெண்மணி ஒரே நேரத்தில் இரண்டு வகை மரபணு மாற்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. மரணமடைந்த பெண்மணி தடுப்பூசி போடாதவர் என்றும், தொற்று உறுதியான அன்று அவர் பலியாகி விட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பிட்ட பெண்மணியை பிரிட்டனில் முதலில் காணப்படும் ஆல்பா வைரசும், தென் ஆப்பிரிக்காவில் காணப்பட்ட பீட்டா வைரசும் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நபர்களிடம் இருந்து அவருக்கு நோய் தொற்று பரவியிருக்கலாம் என இந்த சம்பவம் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு வைரஸ்களால் ஒரு நபருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது இதுவே முதல்முறை என்றாலும் அவர் உடனடியாக உயிரிழந்ததற்கு இந்த இரட்டை வைரஸ் பாதிப்பு தான் காரணமா என தெரிவிக்கப்படவில்லை. அங்கு மேலும் ஒருவர் இதே போன்றதொரு இரட்டை வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon