கேரளாவில் 18 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி..!
கேரளாவில் 18 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள செருவரகொணம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த அந்த பெண்ணுக்கு தொடர் காய்ச்சல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஜிகா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் அவர் தங்கியிருந்த மருத்துவமனையில் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி 14 பேருக்கு ஜிகா வைரஸ் பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தமிழக – கேரள எல்லையான செருவாரக்கோணம் பகுதியில் மேலும் 30க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. குமரி மாவட்ட எல்லைக்கு அருகே உள்ள கிராமத்தில் வைரஸ் கண்டறியப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுவடைந்துள்ளது.






