பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஈரோடு -காசிபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் டி என் பாளையம் வட்டாரம் காசிபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்வி சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி உதயகுமரன், மாவட்ட துணைத்தலைவர் மணி கவுண்டர் என்கிற கே எம் கார்த்திகேயன்,டி என் பாளையம் வட்டார தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய அரசைக் கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கேஸ் கோதண்டன் கண்டன உரையாற்றினார். ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் எம் பிரபாகரன் மத்திய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்.

இறுதியாக காசிபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் விஸ்வநாதன் நன்றியுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் திரவியம்,டி என் பாளையம் வட்டாரத்தைச் சார்ந்த வாணிபுத்தூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், பெரியகொடிவேரி நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் சிவகுமார், விக்னேஷ்,காளியப்பன், மாரிமுத்து, பிரவீன் குமார், டிஎன்.பாளையம் வட்டார துணைத்தலைவர் கே ஆர் கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரன் ராமசாமி போன்ற 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




