--- --:--:-- --

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது..!

8

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல், கூட்டணி, சசிகலா ஆடியோ விவகாரம் முடிந்த பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முறையாக கூட உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.

 

தமிழகத்தில் விடுப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கும் நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்தும், தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

 

சசிகலா ஆடியோ தொடர்பாகவும் அதிமுக 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில் அதன் சிறப்பாக கொண்டாடுவதற்கான திட்டமிடுதல் பற்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon