இன்று அதிகாலை சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்..!
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது அமெரிக்கா சென்று வருகிறார்.
கொரொனா பரவல் காரணமாக அமெரிக்காவுக்கு செல்லாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19-ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு நடிகர் ரஜனிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று கொரொனா பரிசோதனை செய்தார்.
சிகிச்சை முடிந்து அதிகாலை 3 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். அவரை பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு வரவேற்றனர். மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்ததாக தெரிவித்தார்.






