--- --:--:-- --

ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த நடிகை ராஷ்மிகா..!

5

சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரஷ்மிகா மந்தனா தெலுங்கில் குறுகிய கால கட்டத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார்.

 

இதுதவிர பாலிவுட்டிலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடியவர் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக ரசிகர் ஒருவர் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தம் அடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு கூலாக பதிலளித்த ராஷ்மிகா நான் தம் அடித்ததே இல்லை என்றும், அதே போல் தான் தம் அடிப்பவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon