--- --:--:-- --

சென்னையில் இன்று கொரொனா தடுப்பூசி மையங்கள் செயல்படாது..!

6

சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு கொரொனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கிய நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று முகாம்கள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .

 

மத்திய தொகுப்பில் இருந்து போதியளவு தடுப்பூசிகள் வராததால் சென்னையில் கடந்த 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று 45 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டது.

 

இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது சிறப்பு முகாம் செயல்படும் என தடுப்பூசி வந்தபிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சென்னை போன்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் செயல்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon