--- --:--:-- --

விதிகளை பின்பற்ற 8 வார கால அவகாசம் கோரும் டிவிட்டர்..!

8

கவல் தொழில்நுட்பம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளை செயல்படுத்த 8 வார கால அவகாசம் வேண்டும் என ட்விட்டர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கவும், அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விதிமுறைகளை நிறுவனமும் ஏற்காததால் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

இதனால் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்படும் அனைத்து கருத்துக்களும் அந்த நிறுவனத்தின் கருத்துகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon