--- --:--:-- --

இடுப்பு மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி எப்படி தெரியும்… அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

9

பாடநூல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து திண்டுக்கல் லியோனி நீக்கிவிட்டு வேறொரு கல்வியாளரை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள பதிவில் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதையே பிழைப்பாக கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதைவிட அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசுபவர்களுக்கு படிப்பு பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளார். பாடநூல் நிறுவனத்தில் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகவும் எனவும் லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியர் என்பதை அவரது கடந்தகால பேச்சுகளை கேட்டவர்கள் எவரும் நம்ப மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அன்புமணி பாடநூல் நிறுவன தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து நீக்கிவிட்டு தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon