--- --:--:-- --

சானிடைசரில் அடுப்பு பற்ற வைத்த சிறுவன் முகம்கருகி பலி..!

7

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட இபி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரின் மூன்றாவது மகன் ஸ்ரீராம். அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

 

கொரொனா காரணமாக வீட்டிலிருந்து கல்வி பயின்று வந்த நிலையில் ஸ்ரீராமும் நண்பர்களும் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்ய முடிவு செய்துள்ளனர். ஸ்ரீராம் மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் அவர்களது வீடுகளிலிருந்து அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்.

 

ஸ்ரீராமின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தூக்கத்தில் இருந்துள்ளார். அந்த நேரம் வீட்டிற்கு வெளியே வெந்நீர் வைக்கும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை போட்டு தண்ணீரை ஊற்றி வேக வைப்பதற்கு அடுப்பில் வழக்கமாக மண்எண்ணை ஊற்றி பற்ற வைப்பதே பார்த்துள்ள சிறுவன் நீல நிறத்தில் இருந்த சானிடைசரை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

 

அப்போது குப்பென்று பற்றியது. எதிர்பாராதவிதமாக ஸ்ரீராம் மீது பரவி கொழுந்துவிட்டு எழுந்துள்ளது. ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக தீயை அணைத்து உள்ளனர்.

 

மிகக் கடுமையாக முகம் கருகி உடலெல்லாம் தீக்காயமடைந்த ஸ்ரீராம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon