கழிவு நீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!
மதுரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார மையம் பயன்பாட்டிற்கு வராத நிலையில் அங்கு உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் இருக்கிறது.
இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
பின்னர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.






