மணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்த புதுமண தம்பதியை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்..!
திருவாரூர் மாவட்ட பின்ன வாசலில் மணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்த புதுமண தம்பதிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இருந்து திருக்குவளைக்கு சென்று கொண்டிருந்தபோது பின்னவாசல் என்ற இடத்தில் மணமக்கள் திருமண கோலத்தில் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி அந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.






