நடிகை டாப்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சினிமாவில் சம்பளம் அதிகமாக கேட்கும் பெண் என்றால் சர்ச்சை எனவும் ஆண் என்றால் வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கூறப்படுவதாக நடிகை டாப்ஸி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் டாப்சி. சவாலான மற்றும் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் துணிச்சலுடன் நடிப்பதோடு அவ்வப்போது மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பார்.

 

சமீபத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு ஒன்றிய அரசுக்கு எதிரான டாப்சியின் வீடியோ காரணம் என கூறப்பட்டது.

 

தன்னுடன் திரைப் பயணத்தை ஆரம்பித்த நடிகர்கள் 3 முதல் 5 மடங்கு வரை சம்பளம் வாங்குவதாகவும் இதற்கு ரசிகர்களும் ஒரு காரணம் எனவும் சினிமாவில் பாலின ரீதியான ஒரு ஏற்றத்தாழ்வு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Leave a Reply