வெளிநாடு சென்ற கணவன் – பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறியதால் தற்கொலை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ட்டுக்கோட்டையில் கணவன் வெளிநாடு சென்ற நிலையில் தனித்து வாழ்ந்த இளம்பெண்ணுடன் இளைஞர்கள் அத்து மீறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும், தமிழழகி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலமுருகன் வெளிநாடு சென்றதால் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

 

இதனை பயன்படுத்தி அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தமிழழகியிடம் அத்துமீற முயன்றுள்ளனர். அவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் விக்னேஷ், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply