சூரிய வெப்பத்தில் ஆம்ப்லெட் சமைத்த பெண்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொளுத்தும் வெயில் சூரிய வெப்பத்தில் ஆம்லெட் சமைத்த பெண் வீடியோ வைரலாகியுள்ளது. ஒரு பெண் சூரிய வெப்பத்தில் சமைக்க வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

கோடை காலம் வந்து விட்டால் பொது வெளியில் நடமாட யாரும் விரும்புவதில்லை. அதிலும் வழக்கத்தை விடவும் கூடுதலான வெப்பம் இருந்தால் கடுமையான எரிச்சலுக்கு உள்ளாகிறோம். இந்த மாதிரியான காலத்தில் வெளியில் இருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்ள முடியும் என்றுதான் யோசிப்போம்.

 

ஆனால் அதிக வெப்பநிலை இருக்கும் போது அதன் மூலம் சமைக்கலாம் என்று யோசித்து இருக்க மாட்டோம். இந்த நிலையில் ஒரு பெண் சூரிய வெப்பத்தில் ஆம்ப்ளேட் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

இன்ஸ்டாகிராம் கணக்கின் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் கத்தார் நாட்டின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Leave a Reply