தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைப்பதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அந்த தொடரில் மேலாளர் மீது மகளிர் நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றில் படப்பிடிப்பின்போது அந்த தொடரின் மேலாளருக்கும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் ஆசிரியருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்த திருமணம் செய்து கொள்ளாமலே ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ரகு மற்றும் அவரது உறவினர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply