வெப்ப சலனத்தின் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை..!

மிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாளை தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

குமரிக்கடல், மன்னார்வளைகுடா, கேரளா, கர்நாடகா பகுதிகளில் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply