உறவினருக்கு மட்டன் போடாததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணத்தின்போது உறவினருக்கு மட்டன் போடாததால் ஆத்திரமடைந்த மணமகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த ராம்கனுக்கு கடந்த புதனன்று ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக தனது உறவினர்கள் புடைசூழ வந்த மணமகனுக்கு மணமகள் வீட்டார் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்ட போது மட்டன் போடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர் அதே நாளில் மகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து ஊர் திரும்பி விட்டனர்.






