டெல்டா பிளஸ் கொரொனாவை சாதாரண பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது..!
டெல்டா பிளஸ் கொரொனாவை சாதாரண பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜனை உற்பத்தி இயந்திரத்தை வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆக்சிஜன் பற்றாக் குறையை சரி செய்து மீண்டும் அதன் பற்றாக்குறையை நிரந்தரமாக மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது டெல்டா பிளஸ் வைரஸை கொரொனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது என்றும் பெங்களூருவில் ஒரு ஆய்வு கூடத்திற்கு அனுப்பினால் மட்டுமே வைரசை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெங்களூருவில் உள்ள பிரபல ஆய்வு பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக பெற முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






