ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக ஜி. பி. முத்து, சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க புகார்..!
யூடியூபில் ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது.
கீழக்கரையை சேர்ந்த ஒருவர்தபால் மூலம் அனுப்பியுள்ள அந்த புகாரில் ஜி பி முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா ஆகியோர் சிறார்களை சீரழிக்கும் வகையில் யூட்யூபில் ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கார்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது அதுபோன்ற புகார் எதுவும் தனது கவனத்திற்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





