தடுப்பு மருந்து இல்லாமல் வெறும் ஊசி மட்டும் போட்ட நர்ஸ்..!
பிஹாரில் தடுப்பு மருந்து ஏற்றாமல் வெறும் ஊசியை மட்டும் இளைஞரொருவருக்கு போடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்வை தடுப்பூசி போட வந்தவரின் நண்பர் செல்போனில் படம் பிடித்தார்.
புதிய சிரஞ்சின் பாக்கெட்டிலிருந்து எடுத்த பின் தடுப்பு மருந்தை எடுக்காமல் நேரடியாக இளைஞரின் கையில் போடுவது தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவின் அடிப்படையில் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நர்ஸ் தடுப்பூசி போடும் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.






