கருப்பு பூஞ்சை நோயால் 148 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிப்பு..!
தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 148 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசின் சிறப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோயை தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் வழிமுறைகளை வகுக்க மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை கடந்த மே மாதம் தமிழக அரசு அமைத்தது.
இந்த குழு முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் பூஞ்சை நோய் தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் மோகன் தமிழகத்தில் இதுவரை 2500 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதுவரை 148 பேர் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியவர் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.






