--- --:--:-- --

கொரொனா ஆய்வுக்காக நோபல் பரிசு கேட்கும் சீனா..!

3

கொரொனா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்காக வூகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என அந்த நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

 

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உயர் மட்ட செய்தி தொடர்பாளர் ஜாவோலிஜியன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சீனாவின் வூகான் நகரில் தான் முதன்முதலில் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

 

வைரஸின் மரபணு வரிசையை முதலில் சீன விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டது என்பதற்காக கொரோனா வைரஸ் சீனா தான் பரப்பியது என்பது யூகிக்க முடியாத ஒன்று என அவர் கூறினார்.

 

அரசை விமர்சிப்பது நியாயமற்றது என கூறியவர் கொரொனா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்கு வூகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon