மணிகண்டன் உதவியாளர் பரணிதரனுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது..!
நடிகை அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உதவியாளர் பரணிதரனுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பரணிதரன் தரப்பில் மணிகண்டனிடம் நடிகையை அறிமுகம் செய்து வைத்தது தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஆனால் இதற்கு முன் ஜாமின் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிமுன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





