பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவலர் மீது மனைவி புகார்..!
மதுரையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவலர் மீது மனைவி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நாராயணபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அலங்காநல்லூரை சேர்ந்த முத்து சங்கர் என்ற காவலர் கடந்த 2019 இல் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான 3 மாதத்தில் வரதட்சணை பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்து இருவரும் பிரிந்து இருந்துள்ளனர். இந்த நிலையில் காவலர் முத்து ஷங்கர் மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மனைவிக்கு பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது மொபைல் போனை சுபாஷினி ஆய்வு செய்தபோது கணவர் பல பெண்களுடன் ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியது மற்றும் ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் பலரிடம் ஷேர் செய்து பேசி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சுபாஷினி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணவர் முத்து சங்கர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.






