பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரைகுறையாக ஆடையணிவதே காரணம் – இம்ரான்கான்
பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்தால் அது ஆண்களை பாதிக்கும் எனவும், அவர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆணாதிக்கப் போக்கு கண்டனத்துக்குரியது என அந்த நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் இம்ரான் கானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






