தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு சிறை தண்டனை ..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார். அங்கு தற்போது வரை 10 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு நான்கு 4 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக 11 கோடி பேர் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில் வெறும் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிபர் நாட்டில் தடுப்பூசி போட்டு கொள்ள மறுக்கும் மக்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.






