மலையாள திரைப்பட பாடலாசிரியர் பூவாச்சல் காதர் காலமானார்..!
மலையாள திரையுலகில் என்று நினைக்கும் காதல் பாடல்களை எழுதியவர் பூவாச்சல் காதர். புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் பூவசல் காதர் கொரொனாக்குப் பிந்தைய உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
மலையாளத் திரையுலகில் 70 மற்றும் 80 களில் மென்மையான காதல் பாடல்கள் தான் சுமார் 50 ஆண்டுகாலம் மலையாளத் திரையுலகில் இவரது பாடல் வரிகள் சேர்த்திருக்கின்றன. 400க்கும் மேற்பட்ட படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதியிருக்கிறார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பிறந்த இவர் பிறந்த இவர் 1972 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்தார்.






