--- --:--:-- --

தந்தை இறந்த சோகத்தில் மகள் தற்கொலை..!

12

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை இறந்த சோகத்தில் தன் குழந்தை கண்முன்னே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் காளீஸ்வரி.

 

கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் ஐந்து வருடங்களாக தந்தையுடன் வசித்து வந்துள்ளார். உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழந்த நிலையில் காளீஸ்வரி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வாய்க்கால் அருகே திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவ பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon