--- --:--:-- --

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு போக்க வேண்டும்..!

3

மிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு போக்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர் சென்னையில் ஆங்காங்கே மாலையில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இன்றி விவசாயிகள் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர் உயர்ந்து வரும் மின் கட்டணத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon