--- --:--:-- --

ஊரடங்கால் சிலந்திகள் உருவாக்கியுள்ள ராட்சத வலை..!

5

கொடைக்கானல் அருகே சிலந்திகள் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான வலை இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஊரடங்கு காலத்தில் சுற்றுலா தளங்களில் மாசு குறைவதால் இயற்கை புதுப்பொலிவு பெற்று வருகிறது.

 

வனவிலங்குகள் உற்சாகத்தோடு திரிவது மட்டுமின்றி பூச்சிகளும் வலைகளைப் பின்னுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமத்தில் உள்ள இரண்டு மரங்களில் சிலந்திகள் ராட்சத வலை பின்னியுள்ளனர்.

 

பலவகையான பூச்சிகள் உள்ள கொடைக்கானலில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இனவிருத்திக்காக இராட்சத சிலந்திகள் உருவாக்கியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon