அரசு பேருந்தில் கட்டணமின்றி இலவச பயணம் ..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவர் அரசு பேருந்தில் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் அவர்களது துணையாளர்களுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக தமிழக அரசு பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply