தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மேட்டூர் அணையை திறப்பதற்காக பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொற்று காலத்தில் வரவேற்பு அலங்காரங்கள் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காவிரி பாசனப் பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து நாளை மறுநாள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தப் பயணத்தின்போது நிர்வாகிகளும் தொண்டர்களும் தன்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நோய்தொற்று கூடுதலாக இருப்பதால் ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

விரைவில் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு தொண்டர்களை காண நேரில் வருவதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply