கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் கார், ஐபோன், தங்கக்கட்டி பரிசு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனாவின் பிடியிலிருந்து உலகை பாதுகாக்கும் பேராயுதம் தடுப்பூசி. உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும் பரிசுகளும் ஆங்காங்கே அறிவிக்கப்படுகின்றன.

 

அந்தவகையில் ஹாங்காங்கில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் இன்ப அதிர்ச்சி அளிக்கின்றன. 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹாங்காங்கில் இதுவரை 15 விழுக்காடு மக்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

 

அனைத்து மக்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும் மக்களிடம் ஊசி போட்டுக் கொள்ள ஆர்வம் இல்லை. பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

 

அவசியம் என்பதால் ஹாங்காங் நிர்வாகம் அங்கு செயல்படும் பெரு நிறுவனங்களின் உதவியை நாடியது. இதனையடுத்து பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு என பரிசுகளை அறிவித்துள்ளனர்.

 

இதன்படி அந் நிறுவனம் ஆகஸ்ட் 31-க்குள் 2 தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர்களுக்கு ஐபோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. மற்றொரு நிறுவனம் தங்கக்கட்டிகளை வழங்குவதாகவும், குட்நைட் நிறுவனம் காரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளன.


Leave a Reply