அரியர் தேர்வுகள் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ரும் 14ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

 

திமுக அரசு பொறுப்பேற்றதும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருகிற 14-ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் ஆர்வம் உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் 14ஆம் தேதிக்கு பதிலாக 21ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 17-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply