--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

12

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை முதல் வரும் 11-ஆம் தேதி வரை கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon