--- --:--:-- --

நடிகர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.!

5

துப்புத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று பாம்வெச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்து மூழ்கியது. தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

 

தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் ஒன்று மீட்கப்பட்டது. விமானத்தில் பயணித்த மற்ற 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

இதனிடையே மூழ்கிய விமானத்தில் பிரபலமான டாசன் தொலைக்காட்சி தொடரில் நடித்த ஜோலாராவும் ஆகும் பயணித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

 

விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் மூழ்கிய விமானத்தின் பாகங்களை யும் எஞ்சிய உடல்களையும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon