ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ இன்று ஆலோசனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்படுகிறது. 14வது ஐபிஎல் தொடரின்போது வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு கொரொனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

 

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்னும் 31 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்தியாவில் தற்போது கொரொனாவின் தாக்கம் இருப்பதால் இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி‌சி‌சி‌ஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

 

இது குறித்து இறுதி முடிவு எடுக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி தலைமையில் பி‌சி‌சி‌ஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது. எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எங்கே நடத்துவது மற்றும் அதற்கான போட்டி அட்டவணை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.


Leave a Reply