--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் 1823 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்: 12 பேர் பலி!

IMG_20210520_214542

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39ஆயிரத்து 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்,16 ஆயிரத்து 894 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

 

இன்று 976 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இதனையடுத்து மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon