கருப்பு பூஞ்சை வர இதுதான் காரணமா..?
இந்தியர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கொரொனா காலகட்டத்தில் முறையாக கட்டுக்குள் வைக்கப்படாமல் இருப்பதும் கருப்பு பூஞ்சை வர காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கொரொனா சிகிச்சையின் ஸ்டீராய்டு மருந்துகளை தேவைக்கு அதிகமாக அளிப்பதும் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கக்கூடிய மருந்துகளைக் கொடுப்பது போன்றவையும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பரவும் பி.1.617 மரபணு மாற்ற வைரஸானது நோயாளியின் நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது. தரமற்ற ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தினாலும் பூஞ்சை தொற்று வருமா என்ற ஐயம் உள்ளது.
நோயாளிகளால் மருத்துவமனைகள் சுகாதாரமில்லாத முகக் கவசங்கள் ஆக்சிஜன் கருவிகள் ஆகியவை இந்தியாவில் கொரொனா அதிகரிக்க காரணமாக இருக்கக்கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.






