கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை பூஞ்சைகளால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் கொரொனாவில் இருந்து மீண்ட 45 வயது இளைஞர் ஒருவர் கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை பூஞ்சைகளால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
காசியாபாத் சஞ்சனா நகரை சேர்ந்த நபருக்கு மூன்று விதமான பூஞ்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் நாட்டிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்றும் இது அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.






