--- --:--:-- --

வூகான் ஆய்வக விஞ்ஞானிகளுக்கு முதலில் கொரொனா ஏற்பட்டதா..?

1

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே சீனாவின் வூகான் உயிரி விஞ்ஞானிகள் கொரொனா அறிகுறிகளுடன் இருப்பதாக வெளியான தகவல்களை அந்நாடு மறுத்துள்ளது. கொரொனா என்ற கண்ணுக்கு தெரியாத கிருமி உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில் அந்த வைரஸ் சீனாவின் உயிரியல் ஆய்வகத்திலிருந்து முதலில் வெளியே பரப்பியதாக தகவல்கள் உள்ளன.

 

இந்த தகவல்களை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் கொரொனா வைரசின் தோற்றம் குறித்து விரிவான விசாரணை தேவை என உலகெங்கும் குரல்கள் இருந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் பத்திரிகை ஒன்று புதிய செய்தி ஒன்றை வெளியிட்டது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்கள் நாட்டில் முதன் முதலாக கொரொனா பரவியதாக சீனா தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கு சில வாரங்கள் முன்னதாகவே உயிரியல் விஞ்ஞானிகள் மூன்று பேர் நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர முற்பட்டதாகவும் கூறியிருந்தது.

 

உயிரி ஆய்வகத்தில் இருந்து தான் கொரொனா பரவி இருக்கக்கூடும் என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்தது. ஆனால் இந்த தகவலை சீன மருத்துவ ஆய்வுவில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon