கொரொனா தொற்று உள்ளதா என்பதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை..!
கொரொனா தொற்று உள்ளதா என்பதை ஒரு நிமிடத்திற்குள் தெரிந்து கொள்ளக்கூடிய சுவாச சோதனை முறைகள் சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் மற்றும் தொண்டு நிறுவனமும் சேர்ந்து இதை கண்டுபிடித்துள்ளன.
வழக்கமாக ஓட்டுநர்களுக்கு நடத்தப்படும் போதை சுவாச சோதனை போல் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுவாசம் சேகரிக்கப்படும் கருவிலுள்ள மென்பொருளானது அதில் கொரொனா உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் எனவும், கொரொனா இருப்பது தெரியவந்தால் அடுத்தபடியாக ஆர்டிபிசிஆர் நடத்திய உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மலேசியா எல்லையில் இந்த சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.






