தீபாவளிக்கு மோதும் நடிகர் அஜீத் – ரஜினியின் படம்..!
கொரொனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆவதால் நடிகர் அஜித்தின் வலிமை படம், ரஜினியின் அண்ணாத்த படத்தோடு தீபாவளிக்கு ரிலீசாகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துவிட்டது.
சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பணிகள் முடங்கியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆகையால் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ரஜினியின் அடுத்த படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






