--- --:--:-- --

மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பான ஆலோசனை நடத்தினார் பிரதமர்..!

1

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். காணொலி முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்களின் சிகிச்சை குறித்த அனுபவங்களை பிரதமர் கேட்டறிந்தார்.

 

மேலும் நோயாளிகள் கொரொனாவிலிருந்து குணமாகிய மரணத்தில் இருந்து காப்பாற்றிய சிகிச்சை முறைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். மேலும் கொரொனா சிகிச்சை குறித்த தங்களது ஆலோசனைகளையும் பிரதமருக்கு மருத்துவர்கள் வழங்கினர்.

 

செவ்வாய் அன்று கொரொனா பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பேரிடர் காலத்தில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் பிரதமர் காணொலி முறையில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon