--- --:--:-- --

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் இன்று தொடங்குகிறது.!

3

தமிழகத்தின் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் இன்று தொடங்குகிறது. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்டது.

 

அப்போது மக்கள் ஒரே இடத்தில் கூடி தனிமனித இடைவெளி கேள்விக்குறியான நிலையில் தனியார் மருத்துவமனைகளில் லேகிய மருந்தை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் விற்பனை நேற்று நிறுத்தப்பட்டது.

 

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று முதல் இணைய தளத்தில் பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சார்பில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon