நமக்கு கொரோனா வராது என யாரும் எண்ண வேண்டாம்..!
கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ள சூழலில் இளைஞர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார்.
அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நித்திஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
அதனை வீராவின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட வெற்றிமாறன் யாரும் நமக்கு கொரொனா வராது என்று எண்ண வேண்டாம் எனவும் வெளியே சென்று வரும் இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






