--- --:--:-- --

தமிழகத்தில் புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; “இன்று 21,362 டிஸ்சார்ஜ்..!!” 364 பேர் உயிரிழப்பு..!!

IMG_20210518_201454

மிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350  ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தொடர்பான மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது .

 

தமிழகத்தில் தற்போது  2,31,596  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 21,362  பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14, லட்சத்து 03 ஆயிரத்து 052 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னையில் இன்று மேலும்  6,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon